சிதம்பரம் லப்பை தெரு ஜமாஅத்

சிதம்பரம் லப்பை தெரு ஜமாஅத்

Tuesday, April 12, 2011

சிதம்பரம்


சிதம்பரம்

 
சிதம்பரம்
—  தேர்வு நிலை நகராட்சி —
 
சிதம்பரம்
இருப்பிடம்: சிதம்பரம்
தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம்11.2358°′″N79.41°′″Eஅமைவு11.2358°′″N 79.41°′″E
நாடுஇந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கடலூர்
நகராட்சி தலைவர்பௌஜியாபேகம்
சட்டமன்றத் தொகுதிசிதம்பரம்
மக்கள் தொகை
• அடர்த்தி
57,733 (2001)
• 12,028 /km2 (31,152 /sq mi)
நேர வலயம்IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு
• உயரம்
4.8 ச.கி.மீs (1.9 sq mi)
• 106 metres (350 ft)
சிதம்பரம் (ஆங்கிலம் :( Chidambaram) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

பொருளடக்கம்

[தொகு]மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 57,733 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[1]இவர்களில் 28,445 ஆண்கள், 29,288 பெண்கள் ஆவார்கள்.சிதம்பரம் மக்களின் சராசரி கல்வியறிவு 88.58% ஆகும். சிதம்பரம் மக்கள் தொகையில் 11.97% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

[தொகு]வரலாறு

தமிழ் நாட்டில் புகழ் பெற்ற நகரங்களுள் ஒன்று ஆகும். சிதம்பரம், ஆலயநகர் என்றும் நாட்டிய நகர் என்றும் அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் நாட்டியத்திற்கும், கட்டடக்கலைக்கும், பக்திக்கும் புகழ் பெற்ற நகர், சிதம்பரம்.
திருசிற்றம்பலம் என்ற பெயர், சிற்றம்பலமாக மருவி சிதம்பரம் என வழங்கப்படுகிறது. சிதம்பரத்தில் உள்ள ஆலயம் உலகப்புகழ் பெற்றது. இது தில்லை மரங்கள் நிறைந்த காடாக முற்காலத்தில் இருந்ததால், தில்லை என்றும் தில்லையம்பலம் என்றும் அழைக்கப்பட்டது.
வழிபாட்டு தளங்கள் :
மசூதிகள்
இஸ்லாமியர்களின் மசூதிகள் சிதம்பரம் நகர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் சிறிய / பெரிய மசூதிகள் சுமார் பத்து உள்ளன . அவற்றில் நகரில் அமைந்துள்ள மூன்று மசூதிகள் மிகவும் தொன்மையும் சிறப்பும் வாய்ந்தது .  மற்றும் நகரிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பழைமையான சில  ” தர்கா”களும் உள்ளன .
மசூதிகள் இருக்கும் பகுதிகளில் தமிழ் மற்றும் உருது பேசும் முஸ்லீம் பெரும்மக்கள் குடியிருக்கின்றனர் .

[தொகு]ஆலயம்

சிதம்பரத்தில் உள்ள ஆலயம் மிகவும் பழைமையானது, பெருமை வாய்ந்தது. சைவர்களின் முக்கிய கடவுளான சிவபெருமான், நடராசர் என்ற பெயரில் வீற்றிருக்கும் ஆலயமும், வைணவர்களின் முக்கிய கடவுளான திருமால், கோவிந்தராசப் பெருமாள், புண்டரீகவல்லித் தாயாருடன் வீற்றிருக்கும் ஆலயமும் இந்த நகருக்கு பெருமை சேர்க்கிறது. ஏனைய இந்து ஆலயங்களில் லிங்க வடிவமாக இருக்கும் சிவபெருமான், நடனமாடும் நிலையில் இவ்வாலயத்தில் இருக்கிறார். நடனமாடும் நிலை இருப்பதால், பரதநாட்டியம் என்னும் நாட்டியக்கலைக்கு முதற்கடவுளாக நடராசரை வணங்குகின்றனர்.
நாற்பது ஏக்கர் பரப்பளவில், நான்கு திசைக்கென ஒரு கோபுரமாக நான்கு கோபுரங்களும், ஐந்து சபைகளும் உடையது இந்த ஆலயம். இவ்வாலயத்தில் உள்ள கிழக்கு கோபுரத்தில் நூற்றியெட்டு பரதநாட்டிய நிலைகளில் உள்ள சிற்பங்களை காணமுடியும். மேலும் இங்கு மூலவர் சிலை இருக்கும், இடம் கனக சபை என்று அழைக்கப்படுகிறது. இந்த சபை, பராந்தக சோழ மன்னனால் பொற்கூரை வேயப்பட்டு கனக சபை என்ற பெயர் பெற்றது.
சைவப்பெரியோர்களான நாயன்மார்கள் பாடிய தேவாரத்தில் சிதம்பரம் பற்றி கூறப்பட்டுள்ளதாலும், நாயன்மார்கள் நால்வரும் இங்கு வந்து பாடியதாலும் இது பாடல் பெற்ற தலம் என்று அழைக்கப்படுகின்றது. மேலும் பஞ்சபூதங்களில் ஒன்று எனக்கூறப்படும் ஆகாசம் வடிவில், சிவன் இருக்கிறார் என்பதை குறிப்பால் உணர்த்தும் வகையில் சிதம்பர ரகசியம் அமைக்கப்பட்டுள்ளது. இரத்தினத்தால் செய்யப்பட்ட நடராசர் விக்கிரகமும், ஆதிசங்கரர் அளித்த ஸ்படிக லிங்கமும், இன்றும் சிதம்பர ஆலயத்தில் பூஜித்து வரப்படுகிறது.
வைணவக் கடவுளான திருமால் இங்கு திருச்சித்திரக்கூடம் என்ற சபையில், நடராசரின் கனகசபைக்கு வெகு அண்மையில் இங்கு பிரதிட்டை செய்யப்பட்டுள்ளார். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் திருச்சித்திரக்கூடம் பற்றி குறிப்பு உள்ளது.
இவ்வாலயத்தில் சிவகாமியம்மையும் அருள் செய்கிறார்..
இவ்வாலயத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் எனப்படும் ஆயிரம் தூண்கள் கொண்ட மண்டபம், சிற்பக்கலைக்கும், கட்டடக்கலைக்கும் பெயர்பெற்றது. இதை நிபுணர்கள் கட்டடக்கலையின் அற்புதம் என்று புகழ்கின்றனர்.
நடராசர் ஆலயமும், தில்லையம்மன் ஆலயமும், இளமையாக்கினார் ஆலயமும், திருச்சித்திரக்கூடமும் இருப்பதால், ஆலய நகரம் என்று அழைக்கப்படுகின்றது.
சைவ சமயத்தவர்களுக்கு கோயில் என்பது சிதம்பரம் நடராசர் கோயிலையே குறிக்கும். அந்தளவுக்கு சைவமும் சிதம்பரமும் பிணைந்தவை. பெரியகோவில் என்றும் சிலர் அழைக்கின்றார்கள்.

[தொகு]நாட்டியம்

நடனக்கலைகளின் தந்தையான சிவபெருமானின் நடனமாடும் தோற்றம் நடரானராசன் எனப்படுகிறது. இது மருவி நடராசன் எனவும் அழைக்கப்படுகிறது. சிவபெருமானில் பலவகையான நடனங்களில் இத்தலத்தில் ஆனந்த தாண்டவம் நிகழ்கின்றது.
சிதம்பரம் கோவிலில், நாட்டியாஞ்சலி என்ற நாட்டிய விழா ஒவ்வொரு வருடமும் நடைபெறுகிறது. இங்கு உலகில் பல்வேறு இடங்களில் நாட்டியம் பயிலும் கலைஞர்கள், தங்களுடைய நாட்டியத்தை அர்ப்பணமாக வழங்குகின்றனர். கலைஞர்கள் இங்கு வந்து நாட்டியார்ப்பணம் செய்வதை ஒரு பெருமையாக கருதுகின்றனர்.

[தொகு]கல்வெட்டுகள்

பக்தி இலக்கியத்திலும், சங்க இலக்கியத்திலும் தில்லை சிவனைப் பற்றி பாடப்பெற்றுள்ளது. சோழ மன்னர்கள் பலர், இந்த ஆலயத்திற்கு பணி புரிந்துள்ளனர், இங்குள்ள ஆலயத்தில் உள்ள கல்வெட்டுகளிலிருந்தும், பொற்கூரையினாலும் நாம் அறிந்துகொள்ள முடியும். சோழர்களுக்குப்பின் பாண்டிய மன்னர்களும், கிருஷ்ண தேவராயரும் வழிப்பட்டதாகவும் பணிகள் பலபுரிந்ததாகவும் கல்வெட்டுகளில் உள்ளது.

[தொகு]ஆதாரங்கள்

  1.  http://census2001.tn.nic.in/pca2001.aspxUrban – Cuddalore District;Chidambaram Taluk;Chidambaram (M) Town2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய .................